சப்தம் படத்தின் முதல் தோற்றம் வெளியானது

சப்தம் படத்தின் முதல் தோற்றம் வெளியானது

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் படம் 'சப்தம்'. அறிவழகன் இயக்குகிறார். ஈரம், வல்லினம், ஆறுவது சினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இதில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈரம் படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து டப்பிங் பணிகளும், பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சப்தம் படத்தின் முதல் தோற்றம் வெளியானது

இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 
 

Share this story