சீமான் நடிக்கும் ’சீமானின் தர்மயுத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு `

seeman

நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் நடித்துள்ள ’சீமானின் தர்மயுத்தம்’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.  

நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் கூட அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ’சீமானின் தர்மயுத்தம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


 சீமான், அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர் சுப்பிரமணியம் என்பவர் எழுதி இயக்கும் இந்த படத்தை ஆதம்பாவா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூரி வெளியிட்டுளளார்.

Share this story