‘சட்டென்று மாறுது வானிலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

பி.வி ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள படம் ’சட்டென்று மாறுது வானிலை’. இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் பாபு விஜய். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது.
இதில் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
#SattendruMaruthuVanilai pic.twitter.com/VbRowSBdo8
— Jai (@Actor_Jai) June 30, 2025
#SattendruMaruthuVanilai pic.twitter.com/VbRowSBdo8
— Jai (@Actor_Jai) June 30, 2025