நாளை வெளியாகும் 'தளபதி 69' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்

vijay 69

'தளபதி 69' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,   எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். 


நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது. 


இந்நிலையில் நாளை , குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'தளபதி 69' படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this story