தி கோட் லைஃப் முதல் தோற்றம் வெளியீடு

தி கோட் லைஃப் முதல் தோற்றம் வெளியீடு

பிரித்திவிராஜ், மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றவர். மேலும் இவர் லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி இருந்தார். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் ஆடு ஜீவிதம். பென்‌ யாமின்‌ எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்

தி கோட் லைஃப் முதல் தோற்றம் வெளியீடு

இப்படத்தின் முதல் தோற்றத்தை தற்போது படக்குழு சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளது.  ஆடு ஜீவிதம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 

Share this story