நியாயம் கேட்கும் நாய் - கூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
1734445543000
நாய்களை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.அந்த வரிசையில் அடுத்ததாக நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கூரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களம் அமைக்கப்ப்ட்டுள்ளது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது. எஸ்.ஏ சந்திரசேகர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஒய் ஜி மகேந்திரன், சத்யன், பாலாஜி, சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா, ரோபோ சங்கர் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். கனா ப்ரொடக்ஷன் சார்பில் கனா விபி கம்ப்பைன்ஸ்டன் இணைந்து தயாரித்துள்ளார்.திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.