வணங்கான் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு
1695621024804
இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில் தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி இருக்கும் அருண் விஜய் இந்த போஸ்டரில் உள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் டீசர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.