விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
1725793468562
ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் நடித்து இருந்தனர். விக்ராந்த் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் போன்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ராந்துடன் யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர் மற்றும் மிப்பு சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று விஜய் சேதுபதி மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். படத்திற்கு `தி கில்லர் மேன்' என பெயரைட்டுள்ளனர். படத்தின் இறுதி கட்ட பட பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைபடம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.