மாதவன் நடிக்கும் 'அதிர்ஷ்டசாலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
1730626252000
நடிகர் மாதவன் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் மாதவன் கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அதிர்ஷ்டசாலி எனும் திரைப்படத்தில் மாதவன் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் இதற்கு முன் தனுஷ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான திருசிற்றம்பலம் உத்தம புத்திரன் மற்றும் யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இப்படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன், சாய் தன்ஷிகா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மீடியா ஒன் க்லோப் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் 2 விதமான கெட்டப்பில் இருக்கும் மாதவனின் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.
Unveiling the first look of #Adhirshtasaali,Directed by @MithranRJawahar, this has proven to be an awesome, unforgettable journey.😎✨
— Ranganathan Madhavan (@ActorMadhavan) November 3, 2024
#AdhirshtasaaliFirstLook 🤞🏻🎯@MadonnaSebast14 @SaiDhanshika @realradikaa @thisisysr @UpasanaRC @karthikmuthu14 @thiyaguedit @KlcPRJayaraman… pic.twitter.com/6boAqKPTdN