7ஜி ரெயின்போ காலனி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

7ஜி ரெயின்போ காலனி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். அவரது மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இந்த படம். வேலையில்லாமல் சுற்றி திரியும் ஒரு இளைஞன் தனது காதலால் எப்படி மாறுகிறார் என்பது அழகான காட்டப்பட்டிருக்கும். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு  ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. 

7ஜி ரெயின்போ காலனி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததாக கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story