9 மணிக்கு தான் முதல் காட்சி.... அறிவிப்பை வெளியிட்ட அரசு...

9 மணிக்கு தான் முதல் காட்சி.... அறிவிப்பை வெளியிட்ட அரசு...

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே திரையிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு நாள்தோறும் எகிறிக்கொண்டே உள்ளது. இந்த நிலையில், லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. நேரம் குறிப்பிடப்படாமல் 5 காட்சிகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால் அதிகாலை காட்சி என்றே பலரால் பொருள் கொள்ளப்பட்டது. இதனிடையே, பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது. 

9 மணிக்கு தான் முதல் காட்சி.... அறிவிப்பை வெளியிட்ட அரசு...

இந்த நிலையில், தமிழக அரசு லியோ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி என்றும் இரவு 1.30 மணி வரை மட்டுமே திரையிட வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியுள்ளார்.

Share this story