பில்டப் படத்திலிருந்து முதல் பாடல் வௌியானது

பில்டப் படத்திலிருந்து முதல் பாடல் வௌியானது

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கிக். இந்தப் படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியிருந்தார். அருண் ஜான்யா இசையமைத்தார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்தார். மேலும் செந்தில், கோவை சரளா மன்சூர் அலிகான், தம்பி ராமையா, ஒய் ஜி மகேந்திரன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் காமெடி கலந்த கதை களத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, தற்போது குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய கல்யாணுடன் சந்தானம் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில், பிரீத்தி ராதிகா நாயகியாகவும், கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின்கிங்ஸ்லி, தங்கதுரை மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க உள்ளனர். டத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கவுள்ளார். படத்திற்கு பில்டப் என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

Share this story