ஃபைட் கிளப் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது
1702137633675
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவேட் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஜி ஸ்குவேட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவித்தும் உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் வெளியானது. படத்திற்கு ஃபைட் க்ளப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது
இந்நிலையில், ஃபைட் கிளப் படத்திலிருந்து முதல் பாடல் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது. வரும் டிசம்பர் 15-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.