கார்டியன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது
1700145027134

தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், வேலாயுதம், வாலு, சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது நண்பர் மற்றும் தொழிலபதிபரை திருமணம்செய்து கொண்டார். இந்த நிலையில், ஹன்சிகா சினிமாவில் நடிப்பதுடன் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கார்டியன் படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியானது.