ரத்தம் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியீடு

ரத்தம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்திலிருந்து முதல் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரத்தம் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியீடு

இன்பினிட்டி ஃப்லிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘தமிழ் படம்’,’தமிழ் படம்2’ மூலமாக சினிமாவை கலாய்த்த சி.எஸ் அமுதன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. அரசியல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடைய, படத்திலிருந்து ஒரு நாள் என்ற முதல் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்பாடலை, அறிவு வரிகள் எழுதி பாடியிருக்கிறார். ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

Share this story