அன்னபூரணி படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

அன்னபூரணி படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார்‌. அந்த வகையில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்', ஜெயம் ரவியுடன் 'இறைவன்' ஆகிய படங்களை முடித்துள்ள அவர், தனது 75வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில்  சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கார்த்திக் குமார், பழம்பெரும் நடிகை குமாரி சச்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில், அன்னபூரணி படத்திலிருந்து முதல் பாடல் வௌியாகி உள்ளது. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Share this story