இறைவன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு

இறைவன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு

ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. 

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன்.  'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இறைவன் படத்தின் முன்னோட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இறைவன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. அழகாய் எனத் தொடங்கும் இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இறைவன் திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் உள்ளி திரையரங்குகளில் வெளியாகிறது. 

Share this story