'2K லவ் ஸ்டோரி' படத்தின் முதல் பாடல் தெருக்குரல் அறிவு குரலில் ரிலீஸ்..
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி". 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வைப் பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10 வது திரைப்படமாகும். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்குத் தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி பின்னணி பாடகர் தெருக்குரல் அறிவு பாடியுள்ள How Is It Possible Bro? பாடல் தற்போது வெளியாகி உள்ளது.