மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல்  பாடல் நாளை வெளியீடு 

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை ‘அந்தாதுன்’ பட இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ராதா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது.  அதன் பின்னர் டிசம்பர் 15, டிசம்பர் 8 என மாற்றப்பட்ட நிலையில் தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது. இறுதியாக ஒருவழியாக படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். 

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல்  பாடல் நாளை வெளியீடு 

இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, அன்பே விடை எனத் தொடங்கும் இப்பாடல்  நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story