ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா படத்தின் முதல் வீடியோ ரிலீஸ்
ஆச்சார்யா படத்தின் இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘தேவரா’. இவர்களுடன் இணைந்து படத்தில் பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் படம் துவங்கப்பட்ட நிலையில் படத்தை எடுக்க எடுக்க விரிவடைய துவங்கியதாகவும். படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அழுத்தமாக இருக்கும் என்றும் படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். மேலும், இந்த கதையை ஒரு பாகத்தில் அடக்க முடியாது என்பதால் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கதையின் வடிவம் மாறாது என்றும், முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏபரல் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா கூறியுள்ளார்.
இந்நிலையில், தேவரா படத்திலிருந்து முதல் கிளிம்ப்ஸ் காணொலி வெளியாகி உள்ளது. 24 மணி நேரத்திற்குள் இந்த வீடியோ சுமார் 30 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது.