ஆடு புலி ஆட்டம் தொடங்கியது... மத்தகம் இரண்டாம் பாகம் வெளியானது...

ஆடு புலி ஆட்டம் தொடங்கியது... மத்தகம் இரண்டாம் பாகம் வெளியானது...

முதல்முறையாக அதர்வா மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் ‘மத்தகம்’. இந்த வெப் தொடரில் நடிகர் அதர்வா போலீசாகவும், மணிகண்டன் வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஆடு புலி ஆட்டம் தொடங்கியது... மத்தகம் இரண்டாம் பாகம் வெளியானது...

30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. ஒரு இரவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் இந்த படம்.  இந்த வெப் தொடரை பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். இத்தொடரின் முதல் பாகம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், மத்தகம் தொடரின் இரண்டாம் பாகம் ஓடிடி தளத்தில் வெளியானது. 
 

Share this story