The G.O.A.T படத்தின் வசூல் வேட்டை...!

Goat

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை திரைப்பிரபலங்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

 

null


திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்படம் தனுஷின் ராயன் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூலை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் இதற்கு முன் நடித்த லியோ மற்றும் வாரிசு படத்தின் வசூலை விட இது குறைவுதான். இன்னும் வரும் வார இறுதியில் திரைப்படத்தின் வசூல் இன்னும் மிகப்பெரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story