ஐதராபாத்தில் 'தி கோட்' படக்குழு - புகைப்படம் வைரல்
'தி கோட்' திரைப்படம், வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரைலர் மற்றும் 4 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனத்தை ஈர்த்தன.
nullThe selfie from #TheGoat Telugu press meet in hyd!! Thank q @MythriOfficial #theGreatestOfAllTime from September 5th @archanakalpathi @aishkalpathi @actorprashanth @thisisysr @actor_vaibhav @Premgiamaren @actress_Sneha @Meenakshiioffl #laila pic.twitter.com/EgiHBKtk8i
— venkat prabhu (@vp_offl) September 2, 2024
இப்படம் வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கியதையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், தி கோட் படக்குழு படத்தின் புரொமோஷனுக்காக ஐதராபாத் சென்றிருக்கின்றது. அப்போது படக்குழு செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றன. அப்போது படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.