1 கோடி பார்வையை கடந்த The GOAT படத்தின் டிரைலர்...!
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்பொழுது படத்தின் டிரைலர் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. ரசிகர்கள் படத்தின் டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.
Banger theatre response for #TheGoatTrailer 🔥
— AGS Entertainment (@Ags_production) August 17, 2024
10M+ real time views & blasting 💥#TheGoatTrailer 💣
Tamil ▶️ : https://t.co/MQO7cR4XBD
Telugu ▶️ : https://t.co/adqCQ6kfkn
Hindi ▶️ : https://t.co/C8pf5SHQ80@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical… pic.twitter.com/qXjlWYTGHF