விஜய்யின் ‘The GOAT’ ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் இதோ!!
நடிகர் விஜய்யின் GOAT திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த், மோகன் ,பிரபுதேவா ,ஜெயராம், கணேஷ் , யோகி பாபு , அஜ்மல் அமீர், வைபவ் ,பிரேம்ஜி ,அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ், நடிகைகள் சினேகா , லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இறுதி கட்ட பிடிப்பானது தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.
— Vijay (@actorvijay) April 11, 2024
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "GOAT" திரைப்படம் இந்த ஆண்டு செப்.5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரம்ஜான் ட்ரீட் கொடுத்துள்ளது படக்குழு. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் மூலம் அறிவித்தார் நடிகர் விஜய்.