ஆவணப்படமானது வீரப்பன் நிஜ வாழ்க்கை.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு !

TheHuntforVeerappan

ஆவணப்படமாக உருவாகியுள்ள வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் வீரப்பன். சந்தன மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தியது, கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் மீது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. 

TheHuntforVeerappan

மூன்று மாநிலங்களுக்கு சவாலாக இருந்த அவரை கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு அதிரடிப்படை தலைவர் விஜய்குமார் தலைமையிலான போலீசார் சுட்டுக் கொன்றனர். வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தமிழகத்தின் ஒகேனக்கல் முதல் கர்நாடகாவின் குடகு மலை வரை சுமார் 200 கிலோமீட்டருக்கு மேல் வீரப்பனை போல காடுகளை அளந்து நடந்தவர் யாருமில்லை. 

TheHuntforVeerappan

அப்படிப்பட்ட வீரப்பன் குறித்து பல ஆவணப் படங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் பிரபல ஓடிடித்தளமான நெட் ஃப்ளிக்ஸில் வீரப்பன் வாழ்க்கை வரலாறு குறித்து புதிய ஆவணப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற பெயரில் உருவாகியுள்ள அந்த ஆவணப்படம் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

Share this story