‘The Hunt For VEERAPPAN’ - டாக்குமெண்டரி தொடரின் டீசரை வெளியிட்ட 'நெட்ஃப்ளிக்ஸ்' .

photo

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநில அரசுக்கும் சவாலாக மேற்கு தொடர்ச்சிமலைபகுதியில் 30ஆண்டுகாலம்  செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர் வீரப்பன். ஒல்லியான உருவம், பெரிய மீசை, கையில் துப்பாக்கி ஒரு கடத்தல் காரனாக மட்டுமல்லாமல், கணவன், தந்தை, தலைவன் என பல பரிமாணங்களை தன்னகத்தே கொண்ட ஒரு மனிதர். அவரது வாழ்கையை பலர் திரைப்படமாவோ, தொடராகவோ, ஆவணப்படமாகவோ எடுத்த நிலையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளது. அதற்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

photo

மிக நீண்டகாலம் நடந்த வரலாற்று தேடல் வீரப்பன், அவர் கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழக அதிரடி படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது வாழ்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்கள், முக்கிய அம்சங்கள் என வீரபனிற்கு நெருக்கமாக இருந்தவர்களிடமிருந்து பெறபட்ட தகவலின் அடிப்படையில் இந்த ஆவணபடம் உருவாகியுள்ளது. இந்த ஆவண படம் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.


 

Share this story