“தி கேரளா ஸ்டோரி” விவகாரம்: தமிழ்நாடு, மேற்குவங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

photo

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் கடும் சர்சையை கிளப்பிய  நிலையில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இது  தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க அரசுகளிடம் விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

photo

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மத உணர்வுகளை தூண்டுவதாகவும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும், அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதாக கூறி படத்தை வெளியிட தனி நபர்கள் மற்றும் பல அமைப்புகள் கடும் எதிர்பை நாடு முழுவதிலும் இருந்து  பதிவு செய்தனர்.  இந்த படத்தால் நாட்டில் வெவ்வேறான சூழ்நிலை நிலவியது அதாவது தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த படத்தை திரையிடுவதில் பெரும் சிக்கல் நீடித்தது தொடர்ந்து திரையிட தடையும் விதிக்கப்பட்டது. மற்றொரு புறம் உத்திர பிரதேசம், உத்திரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.

photo

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் படம் வெளியிட தடை விதித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள்” தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது, எந்த பிரச்சனையும் எழவில்லை, அப்படியிருந்தும் வெளியிட தடை விதித்த காரணம் என்ன. படம் பிடிக்கவில்லை என்றால் அவர்களே பார்க்கமாட்டார்கள்” என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து திரையரங்கில் திரையிட போதிய பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என தெரிவித்து தடை செய்ததற்கான விளக்க கேட்டு மேற்குவங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் தமிழக திரையரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Share this story