தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி'‌-க்கு தடையா ?... இது காரணம் !

the Kerala story

 தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இன்று முதல்  திரையரங்குகள் நிறுத்தியுள்ளன. 

 கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நடைபெற்ற சம்பவங்களின்  அடிப்படையில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

the Kerala story

கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸசுதிப்தோ சென் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அனைத்து எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் இந்த படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 

மற்ற மாநிலங்களில் வெளியானது போல் தமிழகத்திலும் இந்த படம் வெளியிட்டது. தமிழகத்திலும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய படம் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதனால் வசூல் இல்லை என கூறப்படுகிறது. அதேநேரம் பாதுகாப்பு காரணங்களால் இந்த படத்தை மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. இது மறைமுக தடையாகவே கருதப்படுகிறது. 

Share this story