தொடர்ந்து டிரெண்டிங்கில் 'தி லெஜண்ட்'... புதிய சாதனையால் மகிழ்ச்சி !

the legend

'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடியில் தொடர்ந்து நெம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கிய திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தில் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான அருள் சரவணன், கதாநாயகனாக நடித்திருந்தார். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. 

the legend

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிவியல் சார்ந்து உருவான இந்த படத்தில் விஞ்ஞானியாக அருள் சரவணன் நடித்திருந்தார். எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெளியானது. 

இந்நிலையில் இந்த படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான இந்த படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நெம்பர் ஒன் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது. 

 

Share this story