ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படத்தில் இணைந்தார் யுவன் சங்கர் ராஜா!
ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படமான ‘பராசக்தி’ படத்தில் இணைந்தார் யுவன் சங்கர் ராஜா.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா, அதர்வா, ஜெயம் ரவி, ராணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
The legendary @thisisysr bro sings for #Parasakthi … here we gooooo 🔥🔥🔥#GV100 becomes more special ❤️@Sudha_Kongara pic.twitter.com/1mPeZuRAHa
— G.V.Prakash Kumar (@gvprakash) November 12, 2025
ஜிவி பிரகாஷின் 100வது திரைப்படமான இதில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது இணைந்துள்ளார். பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்னதாக யுவன் சங்கர் ராஜாவின் நூறாவது திரைப்படமான பிரியாணி திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ், இமான், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

