இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கிய முக்கிய நட்சத்திரங்கள்

இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கிய முக்கிய நட்சத்திரங்கள்

ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கிய முக்கிய நட்சத்திரங்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ப்ரீயட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளது.  இந்த நடிகர் கமல்ஹாசன் 90 வயது தாத்தாவாக நடித்து வருகிறார். 

இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கிய முக்கிய நட்சத்திரங்கள்

இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக வீடியோ இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த வீடியோவை தமிழில் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சுதீப், தெலுங்கில் ராஜமௌலி ஆகியோர் வெளியிடுகின்றனர்.

இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கிய முக்கிய நட்சத்திரங்கள்

Share this story