பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அறிவிப்பு... விஜய் ரசிகர்கள் ஆர்வம்..!

kvn

நடிகர் விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதன்படி தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay
அதேபோல் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் டாக்ஸிக் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கீது மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இதில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படமானது 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

yash
தளபதி 69 மற்றும் டாக்ஸிக் ஆகிய இரண்டு படங்களையும் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பில், “2025 ஜனவரி 2ஆம் தேதியை உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர். எனவே ரசிகர்கள் பலரும் இது தளபதி 69 பட அப்டேட்டா? அல்லது டாக்ஸிக் படத்தின் அப்டேட்டா? என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், டாக்ஸிக் திரைப்படம் 2025 டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக புதிய தகவல் ஒன்று உலா வருகிறது. எனவே இது குறித்த அறிவிப்பை தான் நாளை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story