வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் நாளை ரிலீஸ்

ஜெயிலர் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் கூட்டணி அமைத்துள்ள இயக்குநர் த.செ ஞானவேல். சமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்த டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ‘வேட்டையன்’ என படத்திற்கு அட்டகாசமாக டைட்டிலை வைத்துள்ளனர்.தொடர்ந்து படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ள. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். புதுவையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
Watch out! 🎨 Splashing the canvas with VETTAIYAN’s colourful wishes! 😎 Revealing the poster TOMORROW at 9:15 AM! Get ready to witness the vibrant charisma! 😎🌈✨#VETTAIYAN 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/WBVCX778gN
— Lyca Productions (@LycaProductions) January 14, 2024
இந்நிலையில், நாளை தை திருநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.