எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை...ரித்திகா சிங் எடுத்த புதிய முடிவு!

1

தமிழில் ‘இறுதிசுற்று’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். அதன் பிறகு “ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, மழைபிடிக்காத மனிதன்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான இறுதிசுற்று படத்தின் ரீமேக்கிலும் அவரே நடித்திருந்தார்.

தொடர்ந்து நடித்துக் கொண்டு இருந்தாலும் ரித்திகா சிங்குக்கு எதிர்பார்த்த அளவுக்கு திரை உலகில் வாய்ப்புகள் வரவில்லை. இதைத் தொடர்ந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் சிறப்பு போட்டோ சூட் எடுத்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரித்திகாசிங். சமீபகாலமாக நடிகைகள் பலர் கவர்ச்சி தோற்றங்களை தங்களது வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரித்திகா சிங் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி போட்டிக்கு தயாராகி இருக்கிறார்.

Share this story