ரஜினியை காணக்குவிந்த கேரளத்து மக்கள்... ஹாய் சொன்ன ரஜினி...

கேரளாவில் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்களை, ரஜினி பார்வையிட்டு கையசைத்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார்.
#SuperstarRajinikanth #Thalaivar170
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 7, 2023
pic.twitter.com/GkxxYNg1ZX
கேரளாவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான கேரள ரசிகர்கள் குவிந்தனர். இதை அறிந்த ரஜினி, கேரவனை விட்டு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.