‘லால்சலாம்’ படப்பிடிப்பை வீடியோ எடுத்த பொதுமக்கள்... அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் !

lalsalaam

‘லால்சலாம்’ படத்தின் படப்பிடிப்பை வீடியோ எடுத்ததால் பொதுமக்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘லால் சலாம்’.  இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் அவர் இணைவார் என கூறப்படுகிறது.  லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். 

lalsalaam

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது செஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் செந்தில் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

lalsalaam

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள், படப்பிடிப்பை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்டனர். அதன்பிறகு மொபைலில் இருந்த வீடியோக்கள் நீக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Share this story