மர்மர் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சலசலப்பு...!

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக "மர்மர்" உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக் மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரோஹித் மேற்கொண்டுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.
மர்மர் திரைப்படம் இதுவரை சுமார் 3-கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மர்மர் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா என்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
"இதில் பட குழுவினரிடம் பத்திரிகையாளர்கள் இந்தப் படத்தை நீங்கள் influencers வைத்து படத்தை ப்ரொமோட் செய்து அதைப் பார்த்துவிட்டு பொதுமக்கள் படத்தை பார்த்துவிட்டு இது நல்லாவே இல்லை எனக் கூறுகிறார்கள் இந்த குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்.இப்படி பலரும் கேள்வி கேட்க கேள்வி நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டதுபடத்தின் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார் பிறகு ஒரு 150 பேருக்கு நான் இந்த படத்தை போட்டு காட்டுகிறேன் அதற்கு பிறகு அந்த மக்கள் படம் நல்லா இல்லை என்று கூறினால் நான், இந்த படத்தை தியேட்டரில் இருந்து நீக்கி விடுகிறேன்," என பதில் அளித்தார்