கமல் நடிக்கும் புதிய படத்தின் புரமோ காட்சி நாளை ரிலீஸ்

கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதையடுத்து, பிரபாஸின் 'கல்கி 2898 ஏடி', ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் அவர் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். 'நாயகன்' படத்திற்கு பிறகு, 37 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவுக்காக ஒப்பந்தமாகியுள்ளார். கமல்ஹாசனின் 234 வது இது உருவாகிறது.
nullThe Beginning!
— Turmeric Media (@turmericmediaTM) November 5, 2023
Get Ready for the Grand Reveal tomorrow at 5pm
➡️https://t.co/VQvAwutrZS#KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_… pic.twitter.com/K8QzwvpURL
இந்நிலையில், இப்படத்தின் புரமோ வீடியோ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.