ஆடை குறித்த கேள்வி... நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யா ரகுபதி விளக்கம்...!

actress

நடிகை ஐஸ்வர்யா ரகுபதி தனது ஆடை குறித்து கேள்வி கேட்ட நிருபர் பற்றி பதிவிட்டுள்ளார்.


கேப்டன் மில்லர் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரகுபதி. புதியதாக சில படங்களில் நடித்து வருகிறார். குறும்படங்களில் நடிக்கும் இவர் தற்போதைக்கு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் இவர் வெய்யில் காலத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுரை வழங்குவார். அதற்கு அங்கிருந்த ஒருவர், “நீங்கள் அணிந்திருக்கும் உடை வெய்யில் காலத்துக்கு ஏற்றதா?" எனக் கேட்பார்.இது சமூக உடகங்களில் பெரும் சர்ச்சையானது. அந்த நிருபரும் இதற்கு விளக்கமளிக்க இந்த விஷயத்தில் நடிகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.aishwarya
 
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியதாவது: இந்தக் காலத்திலும் பல ஆண்கள் சமூகத்தில் தங்களது ஆண் திமிரையும் ஈகோவையும் வைத்துக்கொண்டு சுற்றுவதைப் பார்க்க கவலையாக இருக்கிறது. இதெல்லாம் நன்றாக அறிந்த ஒரு நிருபரிடம் இருந்து இப்படியான செயலைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.
உணர்வே இல்லாத நபர்களிடமிருந்து சில ஆண்டுகளாக எனக்கு தேவையில்லாத பிரச்னைகள் வருகின்றன. அந்தமாதிரியான நேரங்களில் எனக்கு கோபம், அல்லது மேடை நாகரிகம் கருதி அமைதியாக இருப்பேன். அன்றைய நாளில் நான் அமைதியாக இருந்தேன், ஆனால் பிறகு மிகவும் கவலையாக இருந்தது. சிறுது அழுதேன். பின்னர் என்னை நானே தேற்றிக்கொண்டு எனது வேலையை முடித்தேன். நான் என்னை ஒரு பிரபலமாகவே கருதியதில்லை. இந்த சினிமா, ஊடகத்துறை எல்லாம் எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. 2018-இல் செய்தி வாசிப்பாளராக சேர்ந்த எனக்கு சினிமா, ஊடகம், மனிதர்களின் ஈகோ குறிதெல்லாம் தெரியாது. தற்போது நான் இருக்கும் இடத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன்.


 
படங்களில் துணைக்கதாபாத்திரங்களிலும் குறும் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறேன். ஊடகத் துறையில் பெண்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன். அழகைவிட அவர்கள் செயல் முக்கியமெனக் கருதுகிறேன். நான் எப்போதுமே பிறருக்கு கடின உழைப்பு, கருணை, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.வளரும் நடிகையாக படப்பிடிப்பில் பாராட்டு பெறுவது எனக்கு முக்கியமானது. இருந்தாலும் எனக்கும் பொருளாதார ரீதியாக
பிரச்னைகள் இருக்கின்றன. அதனால்தான் இப்படியான எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகளில் வேலை செய்கிறேன். என்னுடைய துரதிஷ்டம் என்னுடைய கோபத்தை சோதிக்கவே பலரும் வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் வலுவாகிக்கொண்டே செல்கிறேன்.
மக்கள் என்னைப் பார்த்து 'அவங்க வீட்டுப் பொண்ணு' எனக் கூறுவது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு இன்னும் சிறிது நேரம் அளியுங்கள் நான் உங்களைப் பெருமைப்பட வைக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தண்ணீர் குடியுங்கள். உடல்நலத்துடன் இருங்கள் எனக் கூறியுள்ளார்.

Share this story