மீண்டும் தள்ளிப்போன ‘அஸ்திரம்’ படத்தின் வெளியீடு..

ஷியாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஷியாம் நடிப்பில் உருவாகியுள்ள ஆஸ்திரம் படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பைவ் ஸ்டார் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் ஷியாம் தவிர நிரா, வெண்பா, நிழல்கள் ரவி, ஜிவா ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. ஏற்கனவே இப்படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை மாற்றப்பட்ட நிலையில், மார்ச் 7-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளையும் படக்குழு மேற்கொண்டு வந்தது.
ஆனால், ‘கிங்ஸ்டன்’, ‘ஜென்டில்வுமன்’, ‘மர்மர்’, ‘எமகாதகி’, ‘அஸ்திரம்’, ‘நிறம் மாறும் உலகில்’ மற்றும் ‘அம்பி’ என 7 படங்கள் மார்ச் 7-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் பகிர்வில் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் ‘அஸ்திரம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.