த்ரிஷாவின் ‘தி ரோட்’ ஓடிடி ரிலீஸ்.

நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான ‘தி ரோட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Rev up for an adrenaline-fueled ride! 🎬 #TheRoad hits your home on Nov 10, exclusively on @ahatamil. Don't miss out on the action-packed premiere! 🚗💨 #AhaTamil #TheRoadNov10Premiere@aaa_cinemaa@trishtrashers @Actorsanthosh @actorshabeer @actorvivekpra @Arunvaseegaran1 pic.twitter.com/FvkKEDPunN
— AAA_CINEMAA (@aaa_cinemaa) November 3, 2023
இயக்குநர் அருண் வசீகரன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘தி ரோட்’ இந்த படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியான ‘தி ரோட்’ படம் வரும்10ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.