விஜய் ஆண்டனியின் ககன மார்கன் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

gagana maragn

ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு 'ககன மார்கன்' என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போனற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள்.

vijay antony

ககன மார்கன் குடும்பமாக வந்து பார்த்து மகிழக் கூடிய படமாக இருக்கும். விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில் படத்தின் செகண்ட்லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது எதைப்பற்றியான கதைக்களமாக இருக்கும் என கேள்வி எழ தொடங்கியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

Share this story