'டூட்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்...!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்திற்கு டூட் (dude) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் நிலையில், புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
It will be a #Dude Diwali in Tamil Telugu Malayalam Kannada and Hindi #DudeDiwali pic.twitter.com/BcHmzOMM7i
— Pradeep Ranganathan (@pradeeponelife) May 11, 2025