லியோ படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

லியோ படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியீடு


லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாகியுள்ள நிலையில், நாளை இரண்டாவது பாடலை வௌியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 லியோ படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாகியுள்ள நிலையில், Badass என்ற இரண்டாவது பாடலை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Share this story