இறைவன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

இறைவன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது. 

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன்.  'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இறைவன் படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இறைவன் படத்திலிருந்து இதுபோல எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
 

Share this story