ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் 

ஜென்டில்மேன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜென்டில்மேன் 2. முதல் பாகத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கும் நிலையில், நயன்தாரா சக்கரவர்த்தி நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு கீரவாணி இசை அமைக்கும் நிலையில், வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, ஐநா சபையில் ஒலிக்க வேண்டிய பாடல்களை இப்படத்திற்காக எழுதியுள்ளதாகவும், இந்த விழிப்புணர்வு பாடலுக்கு அனைத்து பள்ளி, கல்லூரி மாணவிகளும் இனி நடனமாடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

Share this story