ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘கிங்ஸ்டன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘கிங்ஸ்டன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம். இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி தொடங்கி வைத்தார்.
கடல் பின்னணியில் திகில் சாகச படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 9ஆம் தேதி இப்படத்தின் டீசரை நடிகரும் இயக்குனருமான தனுஷ் வெளியிட்டார். இந்நிலையில், கிங்ஸ்டன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
#Kingston shoot wrapped ….. wrap take … thanks team . pic.twitter.com/1vuVSrRY1s
— G.V.Prakash Kumar (@gvprakash) January 19, 2025