கிருஷ்ணாவின் 23-வது பட ஷூட்டிங் தொடக்கம்...!
1729589711000
கழுகு, கற்றது களவு, விழித்திரு, களரி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் கிருஷ்ணா. இவர் நடிக்கும் 23-வது படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.டான் கிரியேஷன்ஸ் சார்பில் எல். கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார். வர்ஷா விஷ்வநாத் நாயகியாக நடிக்கிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் நடைபெற இருக்கிறது. சஸ்பென்ஸ், ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது என்கிறார் இயக்குநர். நாகர்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை 'கழுகு' இயக்குநர் சத்யசிவா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.