மோகன்லாலின் 'எம்பூரான்' ஷூட்டிங் நிறைவு.. தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் நடைபெற்றது. இந்நிலையில், எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், இன்று காலை 5:35 மணிக்கு, மலம்புழா நீர்த்தேக்கத்தின் கரையில், எம்பூரான் படத்தின் இறுதி காட்சி படமாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
That's a wrap! 🙏🏻 At 5:35 AM today, by the banks of the Malampuzha reservoir, we canned the final shot of #L2E #EMPURAAN 🤗 See you in theatres on 27th March 2025! 🗓️
— Lyca Productions (@LycaProductions) December 1, 2024
Releasing in Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi@mohanlal @PrithviOfficial #MuraliGopy… pic.twitter.com/Ugggkl0Joq